தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் ஜெய். அவரது இயல்பான நடிப்பிற்கென்று ரசிகர்கள் உண்டு.
ஜெய் தற்போது இயக்குநர் சுந்தர் C தயாரிப்பில், பத்ரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதில் ஜெய் ஒரு மேஜையை உடைக்கும்படியான காட்சிகளும் இருந்தது.
அதனை படமாக்கும்போது, எதிர்பாராதவிதமாக, ஜெய்யின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த பிசியோதெரபி குழு, அவரை ஓய்வெடுக்க சொன்னபோதும், அதை பொருட்படுத்தாமல், படக்குழுவின் நலன் கருதி, மீதியுள்ள ஆபத்தான காட்சிகளையும் நடித்து கொடுத்தார்.