தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் 'ஆனந்தம் விளையாடும் வீடு'! - ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பு

நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

gowtham
gowtham

By

Published : Apr 22, 2021, 4:16 PM IST

'ஒரு கல்லூரியின் கதை', 'மாத்தியோசி', 'ஜிகினா' உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி, தற்போது கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கிவரும் படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில், கௌதம் கார்த்திக், சேரன், சிநேகன், சிங்கம் புலி, சரவணன், டேனியல் பாலாஜி, மொட்ட ராஜேந்திரன், சிவாத்மிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தினை ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் 'ஃபர்ஸ்ட்லுக்கை' இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் அண்மையில் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரங்கநாதன் கூறுகையில், 'ஆனந்தம் விளையாடும் வீடு' படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியதுபோலவே, படத்தையும் மிக அழகாக செதுக்கி வருகிறார்.

குறிப்பாக, சேரன், கௌதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் தொடங்கியுள்ளோம். குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும், படப்பிடிப்பில் குடும்ப உறவைகளை போலவே பழகுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

திண்டுக்கல் மக்களும், தங்கள் குடும்பத்தினரை போலவே படக்குழுவைக் கொண்டாடியது; படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையைக் கூட்டியுள்ளது. பொது முடக்கம் முற்றிலும் நீங்கியப் பிறகு, சென்டிமென்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ரசிகர்களுக்கு இப்படத்தை தருவோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details