'ஒரு கல்லூரியின் கதை', 'மாத்தியோசி', 'ஜிகினா' உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி தற்போது கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கிவரும் படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'. ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில், கௌதம் கார்த்திக், சேரன், சிநேகன், சிங்கம் புலி, சரவணன், சிவாத்மிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பிரபலங்கள் வெளியிட்ட 'ஆனந்தம் விளையாடும் வீடு' ஃபர்ஸ்ட்லுக்! - ஆனந்தம் விளையாடும் வீடு ஃபர்ஸ்ட்லுக்
நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
gowtham
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் - நடிகர் பார்த்திபன், நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.