'அபியும் நானும்', 'தனி ஒருவன்' போன்ற திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் தொலைக்காட்சி தொடர் நடிகை நிஷாவை சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே கணேஷ்-நிஷா தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. இதைத்தொடர்ந்து அக்குழந்தையின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் கணேஷ்.