தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் புது முயற்சிகளை மேற்கொள்ளும் வெகு சில தமிழ் இயக்குநர்களில் ஒருவர் ரா.பார்த்திபன். ‘புதிய பாதை’ படத்தின் மூலம் தொடங்கிய பார்த்திபனின் பயணம், புதுப்புது பாதையை நோக்கி பயணிக்கிறது.
மிரட்டுகிறது பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ டிரெய்லர் - ரா. பார்த்திபன்
ரா.பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தற்போது அவர் எடுத்திருக்கும் புதிய முயற்சிதான் ‘ஒத்த செருப்பு’. அவரே தயாரித்து, இயக்கி, அவர் மட்டுமே நடித்திருக்கிறார். ஆம் ஒரே ஒரு நபர்தான் படம் முழுக்க நடித்திருக்கிறார். ஒரே அறைக்குள் படம் முழுவதும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி இதில் பணிபுரிந்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
’ஒத்த செருப்பு’ படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. திரைத் துறை பிரபலங்கள் பலரும் இதன் டிரைலரை ஷேர் செய்து பார்த்திபனுக்கு வாழ்த்துத் தெரிவித்து-வருகின்றனர்.