தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நானும் சிங்கிள் தான்' பத்திரிகையாளர் சந்திப்பு! - நானும் சிங்கிள் தான் பட இசைவெளியிட்டு விழா

சென்னை: ஊரடங்கு கால மன அழுத்தத்தை மறக்கும் விதமாக 'நானும் சிங்கிள் தான்' திரைப்படம் இருக்கும் என இயக்குநர் கோபி தெரிவித்துள்ளார்.

நானும் சிங்கிள்தான்
நானும் சிங்கிள்தான்

By

Published : Feb 5, 2021, 3:09 PM IST

அறிமுக இயக்குநர் கோபி இயக்கத்தில் நடிகர் 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானும் சிங்கிள் தான்'. த்ரி நிறுவனம் சார்பில் ஜெயகுமார், 'புன்னகை பூ' பட நடிகை கீதா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இளைஞர்களை கவரும் வகையில் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் தினேஷுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நானும் சிங்கிள்தான் பட இயக்குநர் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படம் குறித்து இயக்குநர் கோபி கூறுகையில், “வாழ்க்கையில் சிங்கிள் பருவத்தை கடந்து வராதவர்களே இருக்க முடியாது. இந்த ஊரடங்கு கால மன அழுதத்தை மறக்கடிக்க காதலர் தின விருந்தாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

சிறப்பு விருந்தினராக வந்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், “நானும் சிங்கிள் தான். ஆனால் 'டபுல்ஸ்' என்ற படத்தை எடுத்தேன். இதில் பிரபுதேவா, மீனா, சரண்யா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் அப்படத்தால் எனக்கு 85 லட்ச ரூபாய் நஷ்டம். ஒரு இயக்குநரை நம்பித்தான் தயாரிப்பாளர் பணம் போடுகிறார். இயக்குநர்கள் தயாரிப்பாளருக்கு மதிப்பு தர வேண்டும். அதனை நம்பித்தான் படம் இயக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details