தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வாவ்!! இது வேற லெவல்! - தனுஷ் பகிர்ந்த ஆயிரத்தில் ஒருவன் 2 பட போஸ்டர் - aayirathil oruvan poster

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஃபேன் மேடு போஸ்டரை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Dhanush
Dhanush

By

Published : Jan 2, 2021, 4:41 PM IST

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. இத்திரைப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பிறகு சினிமா விமர்சகர்களால் இப்படம் இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

'ஆயிரத்தில் ஒருவன்' வெளியாகி கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகியும், இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன், 'ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். தனுஷ் நடிப்பில் உருவாகும் இப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடிகர் தனுஷ் ட்விட்டர் பதிவு

இந்நிலையில், ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தின் ஃபேன் மேடு (FAN MADE) போஸ்டரை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'வாவ்!! AO 2' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் அதிகம் லைக் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:யாமினிகள் இருக்கிறார்கள்.... மயக்கம் என்ன? நன்றி செல்வராகவன் #9YearsofMayakkamEnna

ABOUT THE AUTHOR

...view details