தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இணையும் விஜய் -தனுஷ் கூட்டணி... உற்சாகத்தில் ரசிகர்கள்! - Actor Dhanush to sing in Vijay movie Beast

நடிகர் விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தில் நடிகர் தனுஷ் பாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் விஜய்
தனுஷ் விஜய்

By

Published : Aug 8, 2021, 12:50 PM IST

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தனுஷ்

இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் ஏற்கனவே தனது படத்திலும் பிற நடிகர்களின் படங்களிலும் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். ஆனால் முதன்முறையாக விஜய் படமான பீஸ்டில் அவர் பாட உள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன. இதனால் விஜய், தனுஷ் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க:கறுப்பு உடையில்...ரசிகர்களை மயக்கும் ஆண்ட்ரியா

ABOUT THE AUTHOR

...view details