நடிகர் தனுஷ் நேற்று (ஜூலை 28) தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.