'கொடி' திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் 'பட்டாஸ்'. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடித்துள்ளார்.
சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.