"நானே வருவேன்" - தனுஷின் அட்டகாசமான புது லுக்! "நானே வருவேன்" திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அட்டகாசமான புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான, "காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை", "மயக்கம் என்ன" உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், ரசிகர்களிடையே நல்ல வரேற்பையும் பெற்றன.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் "நானே வருவேன்" என்ற படத்தில் செல்வராகவன் - தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கரோனா காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிப் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.