பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'பட்டாஸ்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் லால், நடராஜன்,யோகிபாபு, மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்ணன் படத்தின் அப்டேட்டை அவ்வப்போது தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஜனவரி 28ஆம் தேதி உச்சி வெயிலில் மலை உச்சியில் கையில் வாளுடன் தனுஷ் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவித்தார்.
தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில்,' 'கர்ணன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 90 விழுக்காடு படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சூரிய ஒளியின் பின்புலத்தில் குதிரை ஒன்றுடன் தனுஷ் நிற்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்தப் பதிவு தற்போது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது குதிரை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதா என எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மாரிசெல்வராஜின் முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தில் கருப்பி என்ற நாய் முக்கியக் கதாபாத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: யோகிபாபுக்கு தங்க செயின் வழங்கிய 'கர்ணன்'