சென்னை:'துருவங்கள் பதினாறு', 'நரகாசூரன்', 'மாஃபியா' போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் தனுஷை வைத்து புதியப்படத்தை இயக்கிவருகிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
தற்காலிகமாக '#D43' என தலைப்பு வைக்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், தனுஷ் தனது ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் அந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்திற்கான பணிகளில் இணைந்தார்.
ஜூலை 1ஆம் தேதி ஹைதராபாத் வந்த தனுஷ், இப்பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இன்று (ஜூலை.28) தனது 38ஆவது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு 'மாறன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் தனுஷ் ஆக்ரோஷூத்துடன் காணப்படுகிறார். இந்த போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
'மாறன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் தனுஷ்