தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தற்போது மீண்டும் நான்காவது முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.
தனுஷின் 44ஆவது படமாக இது இருப்பதால் தற்காலிகமாக இதனை 'D44' என அழைக்கப்படுகிறது. தற்போது தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்துவருகிறார்.
சில நாள்களில் முடிவடையும் இப்படப்பிடிப்பைத் தொடர்ந்து தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'D44' படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.