கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘#D43'. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்திருந்த நிலையில், தனுஷ் தனது ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் அந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்திற்கான பணிகளில் இணைந்தார்.
ஜூலை 1ஆம் தேதி ஹைதராபாத் வந்த தனுஷ், இப்பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் மாளவிகா மோகனனும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். தற்காலிகமாக '#D43' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.