தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கர்ணன்' எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் - தனுஷ் - கர்ணன் பட பாடல்

சென்னை: 'கர்ணன்' திரைப்படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என நடிகர் தனுஷ் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

karnan
karnan

By

Published : Mar 31, 2021, 7:52 PM IST

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டில் இருப்பதால் கர்ணன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாததால் நடிகர் தனுஷ் கடிதம் மூலம் வாழ்த்து அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், "உங்களுடன் இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற, கொண்டாடுற நிறைய பேர் இந்தப் படத்துல இருக்காங்க.

மாரி செல்வராஜோட உறுதியும் அவரது மனிதாபிமானமின்மையும் ஆச்சரியமாக இருந்தது. என்னைய உங்க கர்ணனா மாத்துனதுக்கும், என் வாழ்க்கையில நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திட்டு இருக்கு.

என்னையும் நான் தேர்ந்தெடுக்குற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணுக்கு நன்றி. அவர் என் மேல வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு ஒரு நடிகனா இருக்கிற பொறுப்புகளை ஞாபகப்படுத்திட்டே இருக்கு. இன்னும் அதிகமா உழைக்கணும் அப்படிங்கிற சக்திய கொடுத்துட்டே இருக்கு.

நம்ம மண்ணோட இசை வழியாகவும் அந்த மண்ணின் கலைஞர்கள் மூலமாகவும் சந்தோஷ் கர்ணனுக்கு ஒரு யானை பலத்தைச் சேர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்துவரும் என் ரசிகர்களுக்கு நன்றி. கர்ணன் உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details