தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதிய வரலாறுகளை உருவாக்கும் 'கர்ணன்' - கர்ணன் தனுஷ்

சென்னை: ஒரு மில்லியன் ஸ்டேப்லர் பின்களில் தனுஷின் உருவம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்த ரசிகருக்கு தயாரிப்பாளர் தாணு வாழ்த்து கூறியுள்ளார்.

dhanush
dhanush

By

Published : Jul 5, 2021, 3:04 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கர்ணன்'. இந்தப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்கிலும் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமிலும் வெளியாகி அமோக வெற்றிபெற்றது.

ஸ்டேப்லர் பின்னில் தனுஷின் உருவம்

இந்நிலையில், கர்ணன் படத்தில் காட்டுப்பேச்சியுடன் தனுஷ் நிற்பது போன்ற புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ஒரு மில்லியன் ஸ்டேப்லர் பின்களை பயன்படுத்தி உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீவக வழுதி என்ற ரசிகர் படைத்த இந்த ஓவியம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்டேப்லர் பின்னில் தனுஷின் உருவம் வரையும் ரசிகர்

இதுகுறித்து தகவலறிந்த கர்ணன் படத்தயாரிப்பாளர் தாணு, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,"புதிய புதிய வரலாறுகளை கர்ணன் உருவாக்கிக்கொண்டு இருக்கிறான். இன்னும் உருவாக்குவான். இப்படைப்பை வரைந்து சாதனை புரிந்த சீவக வழுதிக்கு என் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். மேலும் ஓவியம் உருவான விதம் குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 'டப்பிங் கொடுக்காதது ஏன்?' - கர்ணனின் ஏமராஜா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details