தமிழ்சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இயக்குநரானவர் கே.வி.ஆனந்த். இவர் ரஜினி, தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை (ஏப்ரல் 30) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 54. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் வாயிலாக அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், "நல்ல குணங்கள் கொண்ட ஒரு நேர்மையான மனிதர் காலமானார்.
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த மிகவும் இனிமையான மனிதர். கே.வி. ஆனந்த் சார் மிக விரைவாக போய் விட்டீர்கள். மிகவும் விரைவாக. அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல். கே.வி. ஆனந்த்தின் ஆன்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.
கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து 'அனேகன்' படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.