தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ்! - அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ

புகழ்பெற்ற ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

film
film

By

Published : Dec 18, 2020, 10:45 AM IST

துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கி படிப்படியாக தன்னை மெருகேற்றி அனைவரும் விரும்பும் நடிகராக உயர்ந்தவர் நடிகர் தனுஷ். அதன் பயனாக ஆடுகளம் படத்திற்கா அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. நடிப்பு மட்டுமின்றி பாடல் எழுதுவது, படம் இயக்குவது, தயாரிப்பு உள்ளிட்ட எல்லாவற்றிலும் முத்திரை பதித்து வருபவர் தனுஷ்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் என மாற்று மொழிப் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தை இயக்கிய ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் பிரபலமான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர், கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளனர்.

இவர்கள் ’தி க்ரே மேன்’ என்ற என்ற நாவலை அடிப்படையாக கொண்டு புதிய படத்தை இயக்குகின்றனர். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். க்ரிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டி அர்மாஸ் உடன் அவர் சேர்ந்து நடிக்கவுள்ளார். இதனை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இதற்கு முன் ‘தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற ஆங்கிலப் படத்தில் தனுஷ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் கெத்து காட்டிய தமிழ் படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details