தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாவடி அடித்து சமாதி கட்டும் டேனியல் பாலாஜி இப்போ 'காட்மேன்'! - தாஸ்

நடிகர் டேனியல் பாலாஜி தற்போது திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வராமல் இணையத் தொடர்களிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

daniel balaji

By

Published : Sep 25, 2019, 11:23 AM IST

'வேட்டையாடு விளையாடு', 'பொல்லாதவன்', 'அச்சம் என்பது மடமையடா', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களில் தனது அசுரத்தனமான வில்லன் நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர் டேனியல் பாலாஜி.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இவரின் வில்லத்தனமான நடிப்பால் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வரும் டேனியல் பாலாஜி, தற்போது இணையத்தொடர்களிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இவர் இப்போது இணையத்தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரியவருகிறது.

ஜெயம் ரவியை வைத்து 'தாஸ்' படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் ’காட்மேன்’ என்ற இணையத்தொடரை தயாரித்து வருகிறார். இதில் ஆன்மிக குருவாக டேனியல் பாலாஜி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:ரசிகர்களுக்கு நல்ல தலைவர் விரைவில் வருவார் - டேனியல் பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details