நடிகர் விஜய் இன்று (ஜூன்.22) தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர், என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’பீஸ்ட் மோடுலேயே இருங்க’ - விஜய்யை வாழ்த்திய தனுஷ்