மெகா ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடர்ந்தார். இதையடுத்து அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது, தனது பழைய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் கடந்த ஆண்டு 80ஸ் ரீ யூனியன் பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகைகள் சுஹாசினி, ஜெயசுதா, குஷ்பு, ஜெயப்பிரதா, ராதா ஆகியோருடன் சிரஞ்சீவி நடனமாடுகிறார். அதை பிரபு, சுரேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.