கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அதில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆந்திர முதலமைச்சரை சந்தித்த சிரஞ்சீவி, நாகர்ஜூனா - actor chiranjeevi met Andhra CM to discuss on resuming shooting
ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை நடிகர்கள் சிரஞ்சீவி, நாகர்ஜுனா, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டோர் சந்தித்து படப்பிடிப்பு தொடக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
![ஆந்திர முதலமைச்சரை சந்தித்த சிரஞ்சீவி, நாகர்ஜூனா actor-chiranjeevi-met-andhra-cm-to-discuss-on-resuming-shooting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7553270-thumbnail-3x2-murugan.jpg)
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முக்கிய பிரபலங்களான சிரஞ்சீவி, நாகர்ஜுனா, ராஜமௌலி உள்பட முக்கிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். திரைப்பட படப்பிடிப்பு, திரையரங்குகள் திறப்பு உள்ளிட்ட பலவற்றை குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியார்களிடம் பேசிய சிரஞ்சீவி, 'அவர் நாங்கள் பேசியதை பொறுமையாக கேட்டறிந்து, மாநிலத்தில் விரைவாக படப்பிடிப்பை தொடங்குவதற்கு சாதகமாக பதிலளித்தார். மேலும் திரைப்பட படப்பிடிப்புக்கான வழிகாட்டுதல்களை அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். ஜூன் 15ஆம் தேதிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது’ என்றார்.