தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா நோயாளிகளை நேரில் சென்று சந்தித்த போஸ் வெங்கட் - latest tanjore news

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகளை நடிகர் போஸ் வெங்கட் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

போஸ் வெங்கட்
போஸ் வெங்கட்

By

Published : Jun 6, 2021, 1:19 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கரோனா நோயாளிகளுக்கென பெருமாள் கோயில் பகுதியில் கரோனா தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பெருமாள் கோயில் பகுதியில் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளைத் திரைப்பட நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

கரோனா நோயாளிகளை நேரில் சென்று சந்தித்த போஸ் வெங்கட்

மேலும் அவர்களிடம் நலம் விசாரித்து தைரியமாக இருங்கள், என்றும் வாழ்க்கையிலும் நோயிலுமிருந்து வெற்றிபெற முடியும் என உற்சாகப்படுத்திப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது சார் ஆட்சியர் பாலச்சந்தர், வட்டாட்சியர் தரணிகா, மருத்துவர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details