தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சியான் 60இல் இணைந்த பாபி சிம்ஹா - விக்ரம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் அசால்ட்டாக நடித்து விருது பெற்ற நடிகர் இணைந்துள்ளார்.

சியான் 60இல் இணைந்த அசால்ட் நடிகர்!
சியான் 60இல் இணைந்த அசால்ட் நடிகர்!

By

Published : Mar 12, 2021, 3:59 PM IST

பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு 'சியான் 60' என அழைத்து வருகிறார்கள். 'கோப்ரா' படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவுள்ளார்.

சியான் 60இல் இணைந்த பாபி சிம்ஹா

முதன்முறையாக விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைகிறார். படத்தின் இருநாயகிகளில் வாணி போஜன், சிம்ரன் நடிக்கின்றனர்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக அசத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...இரட்டை வேடத்தில் மீண்டும் திரைக்கு வரும் மன்மதமன் !

ABOUT THE AUTHOR

...view details