தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இந்தியன் 2' செட்டில் பாபி சிம்ஹா பிறந்தநாள் கொண்டாட்டம் - Bobby Simha Celebrated His Birthday

இயக்குநர் ஷங்கர், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், நடிகர் விவேக் உள்ளிட்ட 'இந்தியன் 2' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா.

நடிகர் பாபி சிம்ஹா

By

Published : Nov 7, 2019, 10:50 AM IST

சென்னை: பரபரப்பான ஷுட்டிங்குக்கு இடையில் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர் 'இந்தியன் 2' படக்குழுவினர்.

லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் 'இந்தியன் 2' முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் நகரில் ஷுட்டிங் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

பிஸியான படப்பிடிப்புக்கு இடையே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துவரும் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளை கேக் வெட்டி படக்குழுவினர்கள் கொண்டாடியுள்ளனர்.

இயக்குநர் ஷங்கர், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், காமெடி நடிகர் விவேக் உள்ளிட்டோர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், பாபி சிம்ஹாவோடு எடுத்துக்கொண்ட செஃல்பியை பகிர்ந்துள்ள நடிகர் விவேக், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள கமல்ஹாசனை மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:சினிமாவின் விஞ்ஞானி கமல்ஹாசன் - இயக்குநர் முத்துராமன் சிறப்பு பகிர்வு

ABOUT THE AUTHOR

...view details