சென்னை: திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி பல வெற்றிப் படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50ஆவது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார். R.P.பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.