'கோலா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் பாக்யராஜ் தாம் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தியதாக மேடையில் தெரிவித்தார்.
புத்தருக்கு போதி மரம்; எனக்கு போதை மரம் - கஞ்சா அனுபவத்தை விவரிக்கும் பாக்யராஜ்
புத்தருக்கு போதி மரத்தில் ஞானம் வந்தது போல், எனக்கு கஞ்சாவின் மூலம் வந்தது என்று இயக்குநர் பாக்யராஜ் கலகலவென பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், நான் கோயம்புத்தூரில் இருக்கும்போது எனக்கு கஞ்சா பழக்கம் ஏற்பட்டது. முதலில் அதை பயன்படுத்த பயமாக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து பயன்படுத்தினேன். அதற்கு காம்பினேஷன் ஆக கடலைமிட்டாய் பயன்படுத்தினேன்.
கஞ்சா பயன்படுத்தியதால் சில நேரங்களில் நல்ல ஐடியாக்கள் வரும். சில நேரங்களில் சிரித்துக்கொண்டே இருப்போம். ஏன் சிரிக்கிறோம் என்று தெரியாது. அதுதான் கஞ்சாவின் பலம். ஒருநாள் அதிகமாக கஞ்சா பயன்படுத்தும்போது யோசித்தேன். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். புத்தருக்கு போதி மரத்தில் ஞானம் வந்தது போல், எனக்கு கஞ்சாவின் மூலம் வந்தது. அதன்பிறகு சென்னை வந்து நான் இயக்குநராக அறிமுகமானேன்’ என்றார்.