சென்னை: '8 தோட்டாக்கள்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் குருதி ஆட்டம். இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை ராக்போர்ட் இன்டர்நேஷனலின் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார்.
வெளியானது அதர்வாவின் 'குருதி ஆட்டம்' டீசர் - Priya Bhavani Shankar
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டீசர் இன்று (டிசம்பர் 11) வெளியானது.
Atharvaa
இந்த படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டார். அனல் பறக்கும் இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அதர்வா-பிரியா பவானி சங்கர் ஜோடியினை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இதையும் படிங்க:அதர்வாவின் 'குருதி ஆட்டம்' ஃபர்ஸ்ட் லுக் - விளக்கம் அளிக்கும் இயக்குநர்