நடிகர் அதர்வா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் ‘100’. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா, யோகி பாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு நடக்கும் கொடூரங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நடிகர் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன், இசையமைப்பாளர் சாம் டி எஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் அதர்வா, “பொதுவா நமக்கு ஒரு பிரச்னை வரும்போது 100க்கு தான் ஃபோன் செய்வோம். அங்கு ஃபோன் எடுத்து பேசுபவர்கள் ஆண்டவனுக்கு சமம். அவர்கள்தான் என்ன பிரச்னை என்று நம்மிடம் கேட்டு அதை ஒருங்கிணைத்து நாம் என்ன செய்யவேண்டும் என ஆறுதல் கூறுவார்கள்.