தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அசோக் செல்வனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்! - அபர்ணா முரளி

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ashok
ashok

By

Published : Jun 28, 2021, 3:44 PM IST

'வான்' பட இயக்குநர் கார்த்திக் இயக்கும் புதியப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில், அசோக் செல்வனுடன் நடிகைகள் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். வயகாம் 18 ஸ்டுடியோஸ் - ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன்.28) தொடங்கியது.

அசோக் செல்வனின் புதிய படம்

சமீபத்தில் அசோக் செல்வனின் நடிப்பில் வெளியான 'தீனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் அசோக் செல்வனுடன் ரீத்து வர்மா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இந்த புதிய படத்தில் மூன்று நடிகைகள் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பு உள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாஸ்டல்' திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details