கரோனா பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி மீது பலருக்கு சந்தேகம் எழுந்தாலும், மருத்துவர்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாது அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்து, மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.