சென்னை: அழகிய கண்ணே படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா நாளை வெளியிடுகிறார்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் R. விஜயகுமார் இயக்குகிறார். லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, முக்கிய வேடங்களில் பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
அழகிய கண்ணே: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஆர்யா - அழகிய கண்ணே
’அழகிய கண்ணே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா நாளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகிய கண்ணே ஃபர்ஸ்ட்லுக் வெளியிடும் ஆர்யா
N.R. ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா நாளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நண்பர்கள் தினம்: உயிரை கொடுத்த கென் டேலி!
TAGGED:
அழகிய கண்ணே