தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது படத்திற்காக உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் புதிதாக நடிகர் ஆர்யா இணைந்துள்ளார்.
ஆம்! இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை அதிகரித்து மிகவும் ஃபிட்டாக வைத்துள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
1970ஆம் ஆண்டு நடந்த குத்துச்சண்டையை அடிப்படையாக, வைத்து உருவாகிவரும் இப்படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்யா உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.