2011ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மெளன குரு' படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவர் எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படமாக 'மகாமுனி' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'மேயாத மான்' படப்புகழ் இந்துஜா நடித்துள்ளார். நடிகை மகிமா நம்பியார் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துள்ளார்.
ஆர்யாவின் 'பிசிரே இல்லாத ஸ்கெட்ச்' - 'மெளன குரு' இயக்குநரின் 'மகாமுனி' டீசர் - மகாமுனி டீசர்
'மெளன குரு' இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'மகாமுனி' படத்தின் அதிரடியான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்துக்கு எஸ்.எஸ் தமன் இசையமைக்க, அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப் படத்தில் பட்டையான மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ஆர்யா, நடுத்தர குடும்பத்து பெண் போன்று சேலை அணிந்தவாறு இருக்கும் இந்துஜா ஆகியோரின் புகைப்படங்கள் ஃபஸ்ட் லுக்காக வெளியாகின.
மாறுபட்ட தோற்றத்தில் நடிகை மகிமா நம்பியார் உக்கிரமாக பார்ப்பது போன்று புகைப்படமும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில், மகாமுனி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டீசரில் வரும் வசனங்களில் அனல் தெறிக்கின்றன. இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.