தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை': உரிமையை கைப்பற்றிய கலைஞர்! - ஆர்யாவின் சார்பட்டா

ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

sarpatta
sarpatta

By

Published : Aug 26, 2021, 7:34 PM IST

இயக்குநர் பா. இரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

உடல் அமைப்பை மாற்றிய ஆர்யா

இப்படத்திற்காக ஆர்யா உடற்பயிற்சி மேற்கொண்டு, தனது உடலைக் கட்டுமஸ்தாக மாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப்படத்தை கே9 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக, இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூலை.22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களை கவர்ந்த கதாபாத்திரங்கள்

இப்படத்தில் ஆர்யா கதாபாத்திரம் மட்டுமல்லாது வேம்புலி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டினர்.

தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய கலைஞர்

தற்போது இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இதுகுறித்து ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'மதராசபட்டினம்' ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமையும் கலைஞர் தொலைக்காட்சி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை சிறப்பு - உதயநிதி பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details