'மூடர் கூடம்', 'அலாவுதீனின் அற்புத கேமரா’ ஆகிய படத்திற்கு பிறகு நவீன் இயக்கும் படம் 'அக்னி சிறகுகள்'. இப்படத்தில் அருண்விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்றாயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
முன்னணி நடிகர்களை வைத்து நவீன் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி சீனு என்ற காபாத்திரத்திலும், அக்ஷரா விஜி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முக்கால்வாசி பகுதி ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக இதன் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இதனையடுத்து டப்பிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், அருண்விஜய் அக்னி சிறகுகள் படத்தில் தனது பகுதிக்கான காட்சிகளுக்கு டப்பிங் முடித்து விட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அக்னி சிறகுகள்'அருண்விஜய் மிருகத்தைப் போல் சண்டையிடுவார் - இயக்குநர் நவீன்