தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹரி. இவர், முதல் முறையாக அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘யானை’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
அருண் விஜய்யின் யானை டீசர் எப்போது? - இயக்குநர் ஹரி
நடிகர் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய்யின் யானை டீசர்
மேலும் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஹரி படத்தில் அருண் விஜய் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பனாமா பேப்பர்ஸ் விவகாரம் - ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்