தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் அருண் விஜய்க்கு கரோனா பாதிப்பு - Actor Arun Vijay tests corona positive

நடிகர் அருண் விஜய் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அருண் விஜய்
அருண் விஜய்

By

Published : Jan 5, 2022, 4:41 PM IST

Updated : Jan 5, 2022, 7:42 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களும் தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர்.

சமீபத்தில் லண்டன் சென்ற வடிவேலு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம். நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

அதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவரின் ஆலோசனைப்படி நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைத்து அன்புக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் மகான்?

Last Updated : Jan 5, 2022, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details