தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது புதிதல்ல. அந்தவகையில் தற்போது நடிகர் விஜயகுமாரின் பேரனும், அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு பணி மேற்கொள்கிறார், நிவாஸ் பிரசன்னா படத்திற்கு இசையமைக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தையும் நடிகருமான அருண் விஜய் நடிக்கிறார். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது.