தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அன்புதான் நம்மை இயக்குகிறது - அருண் விஜய் நெகிழ்ச்சி - அருண் விஜய்யின் புதிய படங்கள்

சென்னை: தனது படப்பிடிப்பின் இடைவேளையில் சாலையோர கடையில் சாப்பிட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.

Arun Vijay
Arun Vijay

By

Published : Aug 23, 2021, 6:47 AM IST

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், தற்காலிகமாக AV33 என்று பெயரிட்டிருக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சென்னை, பழனி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்ட சூழலில் தற்போது ராமேஸ்வரத்தில் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்துக்கான சண்டை காட்சி ஒன்று சமீபத்தில் தனுஷ்கோடியில் படமாக்கப்பட்டது. அதனை அப்பகுதி மக்கள் ஆர்வமாக பார்த்தனர்.

அந்த படப்பிடிப்பின் மதிய இடைவேளையில், அருகே இருந்த சாலையோர கடையில் அருண் விஜய் திடீரென நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சியுற்றனர்.

இதனையடுத்து அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடித்து அவர் போகும்போது அவருடன் கடைகார பெண் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் புகைப்படத்தை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ரோட்டுக் கடையில் உணவருந்தியபோது..!! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்புதான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details