தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒரே படத்தில் இணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்! - சினிமா செய்திகள்

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்தியத் திரை உலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் திரைத்துறையின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்னவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள்.

actor arun vijay new movie
actor arun vijay new movie

By

Published : Feb 7, 2021, 9:11 PM IST

சென்னை:தமிழ் திரைத்துறையின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்னவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள்.

இது குறித்துப் படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது, “தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜய்குமார் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிலும் ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

'ஸ்டைலிஷ் தமிழச்சி' அக்சராவின் பேசும் புகைப்படங்கள்!

இப்படத்தில் பங்குபெற சம்மதித்ததற்கு, மூத்த நடிகர் விஜய்குமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அருண் விஜய் போன்று விஜய்குமாருக்கும் கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை. அவரது கதாபாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கிக் கூறினேன். இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுப்பூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாபாத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் மிக அழகாக உருவாகி வருகிறது” என்றார்.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது. இதனை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்பி ஃபிலிம்ஸ் எஸ்.ஆர்.ரமேஷ் பாபுவுடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details