ஆனால் இந்தச் சினம் அப்பாடி அல்ல. தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாக இருக்கும். படத்தின் கதாநாயகன் அப்படியான சினம் கொண்டவன்.
சினம் படத்தில் என்ன மாதிரியான கேரக்டர் - விவரிக்கும் அருண்விஜய் - Actor Arun vijay character in Sinam movie
தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தேவையானவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரவும் சினம் என்பது அவசியமான கருவி என சினம் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து விவரித்துள்ளார் நடிகர் அருண்விஜய்.
நடிகர் அருண் விஜய்
இயக்குநர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து வரும் 8ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றார்.