அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன், அருள்நிதியை வைத்து இயக்கி வரும் படம் தேஜாவு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டியும் PG மீடியா ஒர்க்ஸ் சார்பில், முத்தையாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன். 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.
தேஜாவு படப்பிடிப்பு நிறைவு ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு, முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் 'தேஜாவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது 'தேஜாவு' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கவுள்ளனர். விரைவில் படத்தின் ட்ரெய்லர், படம் வெளியாகும் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர் அருள்நிதி பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து