தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் அர்ஜுன் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

தமக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகர் அர்ஜுன் அறிவித்துள்ளார்.

அர்ஜுன்
அர்ஜுன்

By

Published : Dec 14, 2021, 7:24 AM IST

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் அர்ஜுன். இவர் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்குவது, தயாரிப்பது என ஆல் - ரவுண்டராக அசத்தி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கிவந்த 'சர்வைவர்' நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து அர்ஜுனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

அர்ஜுன் வெளியிட்ட பதிவு

என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான் நன்றாக இருக்கிறேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். மாஸ்க் அணிய மறக்காதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நடிகைகள் கரீனா கபூருக்கும் அம்ரிதா அரோராவுக்கும் கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details