தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
கண்ணன் தாமரைகுளம் இயக்கும் 'தி ஃபிஸ்ட்' என்னும் புதிய படத்தில் அர்ஜுன் நடிக்கிறார். இதில் அர்ஜுனுடன் நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மலையாள நடிகர்கள், முகேஷ், அஜு வர்கீஸ், நடிகை ஆஷா சரத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ரவி சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.