தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! - வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: இயக்குநர் வசந்தபாலன் தன் நண்பர்களுடன் தொடங்கிய 'அர்பன் பாய்ஸ்' ஸ்டூடியோஸின் முதல் தயாரிப்பின் படப்பிடிப்பு தொடங்கியது.

Arjun Das
Arjun Das

By

Published : Feb 19, 2021, 6:41 AM IST

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து 'ஆல்பம்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். தொடர்ந்து 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

தற்போது அவர், தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் 'ஜெயில்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இவற்றில் நடிகர் தனுஷ், நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்...’ பாடல் 14 லட்சம் (1.4 மில்லியன்) பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தற்போது, வசந்தபாலன் தனது பள்ளி தோழர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதில் ஒருவரான வரதராஜன், வசந்தபாலனுடன் ஆல்பம் திரைப்படம் தொடங்கி, அவரது எல்லா திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர்.

இவர்கள் இணைந்து தயாரிக்கவுள்ள முதல் படத்தை வசந்தபாலனே இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும், துஷாரா விஜயன் நாயகியாகவும், சிங்கம்புலி, பரணி, ஷா ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

'வெயில்', 'ஜெயில்' ஆகிய படங்களுக்கு பிறகு ஜி.வி பிரகாஷ் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக வசந்தபாலனுடன் இணைகிறார். எட்வின் சாக்கே ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்.18) பூஜையுடன் தொடங்கியது. சென்னையிலேயே படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹீரோவானார் மிரட்டல் வில்லன் அர்ஜுன் தாஸ்

ABOUT THE AUTHOR

...view details