காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' வில் நடித்து வருகிறார் ஆரி. இதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால் ஆரியோ கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
பிறந்தநாளில் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரெட்டச்சுழி ஆரி! - நடிகர் ஆரி
'அலேகா' படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டாமல் அனைவருக்கும் இளநீர் கொடுத்து வித்தியாசமாக தனது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் ஆரி.
நடிகர் ஆரி படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்
இதற்கு முன்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஆரி. அதோடு "மாறுவோம்... மாற்றுவோம்!' என்ற அமைப்பு மூலம் ‘நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தை சமீபத்தில் தொடங்கி விவசாயத்திற்காகவும் களமிறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தமிழில் கையெழுத்து போடுவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.