பழம்பெரும் நடிகர், கவிஞர் அமரசிகாமணி (70) மாரடைப்பு காரணமாக இன்று காலை 4 மணிக்கு உயிரிழந்தார். அவரது மகன் பார்த்திபன் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மாரடைப்பால் காலமானார் அமரசிகாமணி - கலைமாமணி
அமரசிகாமணி தனது மனைவி சியாமளா தேவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன் இருந்து வந்தார்.
தமிழ் சின்னத்திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியதன் மூலம் அறியப்படுபவர் அமரசிகாமணி. கடந்த சில ஆண்டுகளாக நடுக்குவாதம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்றிரவு சின்னதாக மாரடைப்பு ஏற்பட்ட அவர், இன்று காலை 4 மணியளவில் உயிரிழந்தார்.
சின்னத்திரை பிரபலங்களும், திரைக்கலைஞர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மடிப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அமரசிகாமணி தனது மனைவி சியாமளா தேவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன் இருந்து வந்தார்.