ஆண்டுக்கு ஒருமுறை நார்வேயின் ஓஸ்லோவில், ‘நார்வே தமிழ்த் திரைப்பட விழா(Norway Tamil Film Festival Awards-NTFF)’ நடைபெறுவது வழக்கம்.
நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் விழாவினைத் தொடங்கிவைத்த சசிகுமார்! - Film festival
நார்வே: 10ஆவது நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவினை நடிகரும், தயாரிப்பாளருமான சசிக்குமார் தொடங்கிவைத்தார்.
![நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் விழாவினைத் தொடங்கிவைத்த சசிகுமார்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3111769-thumbnail-3x2-film.jpg)
இவ்விழாவில் தமிழ்த் திரைப்படத்துறையில் படம், நடிப்பு, பாட்டு, பாடகர், இசை, இயக்கம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பாராட்டி விருதுகள் அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான விழாவினை நடிகரும், தயாரிப்பாளருமான சசிக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், “நார்வே தமிழ்த் திரைப்பட விழா படிப்படியாக வளர்ச்சியடைந்து 10 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த 10ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவினைத் தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது” என்றார்.